Home Cinema News Kalvan: ஜி.வி. பிரகாஷ் மற்றும் ஐவனா புதிய படம் – மோஷன் போஸ்டர் பகிர்ந்த தனுஷ்

Kalvan: ஜி.வி. பிரகாஷ் மற்றும் ஐவனா புதிய படம் – மோஷன் போஸ்டர் பகிர்ந்த தனுஷ்

0

Kalvan: பிரபல இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையில் மட்டுமின்றி நடிப்பிலும் முத்திரை பதித்தவர். ஜி. வி. பிரகாஷ் நடித்த ‘இளங்கலை’, ‘ஐங்கரன்’, ‘ஜெயில்’ போன்ற படங்கள் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றன. தற்போது ஜி. வி. பிரகாஷ் அறிமுக இயக்குனர் பி. வி ஷங்கர் இயக்கத்தில் ‘கள்வன்’ படத்தில் நடித்து வருகிறார்.

Kalvan: ஜி.வி. பிரகாஷ் மற்றும் ஐவனா புதிய படம் - மோஷன் போஸ்டர் பகிர்ந்த தனுஷ்

ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிக்கும் இந்தப் படத்தில் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்நிலையில் தற்போது இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் மோஷன் போஸ்டரை நடிகர் தனுஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளதோடு, படம் வெற்றியடைய படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற லவ் டுடே படத்தில் பிரதீப் ரங்கானந்தாவுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்த நடிகை ஐவனா, இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடிக்க கையெழுத்திட்டுள்ளார். இந்த ஜோடி ஏற்கனவே நாச்சியார் படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version