Home Cinema News Viruman Box Office collections: விருமன் முதல் நாள் வசூல் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Viruman Box Office collections: விருமன் முதல் நாள் வசூல் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

0

Viruman Box Office: கார்த்தி நடித்த ‘விருமான்’ திரைப்படம் பெரிய திரைக்கு வந்துள்ளது, மேலும் இப்படம் உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் வெளியாகியது. கிராமப்புற நாடகம் ரசிகர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. கொம்பன், பருதிவீரன் போன்று கார்த்திக் ஏற்கனவே பார்த்த கெட்டபிலயே இருக்கிறார், படத்தில் வித்தியாசம் ஒன்றும் இல்லை என்று பல விமர்சனங்களுக்கு மத்திலும் விருமன் படம் முதல் நாள் வசூலில் கார்த்தியின் முந்தைய கடைக்குட்டி சிங்கம், கொம்பன் படங்களை விட இப்படம் அதிக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

Also Read: ஸ்பெயின் விடுமுறையில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் – வைரலாகும் புகைப்படங்கள்

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் பேனரில் குட்டிப்புலி படத்தை இயக்கி தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார் எம். முத்தையா. அதை தொடர்ந்து கொம்பன், மருது, கொடிவீரன், தேவராட்டம், புளிகுத்தி பண்டியன் போன்ற படங்களை இயக்கியுள்ளார். தற்போது கார்த்திக் மற்றும் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நடித்து வெளியாகி இருக்கும் விருமன் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாகி அப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

Viruman Box Office collections: விருமன் முதல் நாள் வசூல் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கார்த்திக்கின் கொம்பன் மற்றும் கடைக்குட்டி சிங்கம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றிருந்தாலும் அவற்றின் முதல் நாள் வசூலை விட இருமடங்கு அதிகமாக தற்போது விருமான் படம் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மேலும் இது கார்த்தியின் கேரியரில் பெஸ்ட் ஓப்பனிங் என கூறப்படுகிறது. விருமன் ஏ சென்டர்களில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் பி மற்றும் சி சென்டர்களில் வரவேற்பை பெற்றுள்ளது. சனி, ஞயாயிற்று கிழமைகளில் வரவேற்பு இருந்தால் இன்னும் நல்ல கலக்ஷெனை எதிர்பார்க்கலாம் என்று விநியோகஸ்தர்கள் கூறுகின்றனர்.

Also Read: கார்த்தியின் விருமன் படம் இந்த OTT-யில் வர உள்ளது

விருமன் படத்தை மாநிலம் முழுவதும் சக்தி ஃபிலிம் பேக்டரியின் பி.சக்திவேலன் விநியோகம் செய்து ஆகஸ்ட் 13 சனிக்கிழமையன்று சமூக ஊடகங்களில் அறிவித்தது, படம் முதல் நாளில் அனைத்து மையங்களிலும் 8.2 கோடி வசூல் செய்துள்ளது என்று அதிகாரபூர்வமாக கூறியுள்ளனர். படத்தின் விநியோகஸ்தரின் இந்த சமீபத்திய அறிக்கை ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. முன்னதாக, கார்த்தியின் 2018 ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் குடுத்த கடைக்குட்டி சிங்கத்தை விட விருமன் மூன்று மடங்கு பெரிய ஓப்பனிங்கைப் பெற்றதாகவும், இப்போது அதிகாரப்பூர்வமாக பாக்ஸ் ஆபிஸில் விருமன் அதிக வசூல் செய்ததாகவும் சக்திவேலன் தெரிவித்திருந்தார்.

கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடித்திருக்கிறார். அவரது நடிப்புக்கு கிடைத்த வரவேற்பு பிரமிக்க வைக்கிறது. முதல் படத்திற்கு இவள்ளவு வரவேற்ப்பா என்று ஆச்சிரியமூட்டும் வகையில் இருக்கிறது. சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் முதல் நாள் வசூல்லுக்கு ஈடாக கார்த்திக்கின் விருமன் படம் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version