Author: Shankarigsr
“Pocket Cinema News – Tamil cinema updates, OTT buzz, breaking film news and AI-powered entertainment insights in one place.”
Vijay Sethupathi: இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் சேதுபதி, 2022-ஆம் ஆண்டு கலவையான படங்கள் கொடுத்தார். விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட ‘கடைசி விவசாயி அவர் தயாரித்து நடித்தார், இருப்பினும் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் தோல்வியடைந்தது. சீனு ராமசாமி இயக்கிய ‘மாமனிதன்’ சாதகமற்ற விமர்சனங்களைப் பெற்றாலும், அந்தப் படம் அவருக்கு சில விருதுகளைப் பெற்றுத் தந்தது. Also Read: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் நடிக்க இருக்கும் மற்றொரு மெகா ஸ்டார் விஜய் சேதுபதி பின்னர் விக்னேஷ் சிவன் இயக்கிய ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ மூலம் பாக்ஸ் ஆபிஸ் வெற்றி பெற்றது. பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘விக்ரம்’ படத்தில் அசுர வெற்றி பெற்றார். அதில் அவர் ஃபஹத் பாசில் மற்றும் கமல்ஹாசன் ஆகியோருடன் நடித்தார். நித்யா மேனன் நாயகியாக நடித்த ’19(1)(a)’ என்ற முதல் முழு மலையாளப் படம் பெரிய அளவில் கவனிக்கப்படாமல் போனது. இருப்பினும்…
Jailer: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ திரையரங்குகளில் திருவிழா போல் கொண்டாடும் பெரிய படங்களில் ஒன்றாகும். ரசிகர்கள் காத்திருக்க முடியாத வகையில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. ஜெயிலர் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க, நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. Also Read: கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் புதிய அப்டேட் ‘ஜெயிலர்’ படத்தில் ஏற்கனவே கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் ஒரு சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது நமக்கு தெரிந்த விஷயம். இப்போது மற்றொரு பழம்பெரும் மெகா ஸ்டார் விரைவில் இணையவுள்ளார் என்ற ஹாட் செய்தி தற்போது கிடைத்துள்ளது. மாலிவுட் மெகாஸ்டார் மோகன் லால் ஒரு சுருக்கமான மிக முக்கியமான பாத்திரத்தில் நடிக்கிறார் என்ற செய்தி தற்போது கோலிவுட்டில் பரபரப்பான செய்தியாகும். அவர் ரஜினியுடன் ஜனவரி 8 ஆம் தேதியில் இருந்து படப்பிடிப்பில் ஈடுபடுவார் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த…
Indian 2: உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த ஆண்டு விக்ரம் படத்தில் இணைந்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார் வசூல் சாதனை படைத்தார். உலக நாயகன் தற்போது ஷங்கர் சண்முகம் இயக்கத்தில் தனது நீண்ட நாள் படம் இந்தியன் 2 படத்தில் பிஸியாக இருக்கிறார். Also Read: சமீபத்திய மலையாள சூப்பர் ஹிட் படம் அதன் OTT வெளியீட்டு தேதி அறிவித்தது தற்போதைய ஹாட் செய்தி என்னவென்றால் இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 22, 2023 அன்று மீண்டும் தொடங்கும் என்பது சமீபத்திய செய்தி. ஆதாரங்களின்படி, திருப்பதி மற்றும் அருகிலுள்ள இடங்களில் படப்பிடிப்பு நடக்கும் என்று தெரிகிறது. ஏப்ரல் இறுதிக்குள் படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படத்தின் தொடர்ச்சியான இந்த இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்து வருகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் பேனரின்…
OTT: மலையாள சினிமா செழிப்பான படங்களுடன் செழித்து வருகிறது. சமீபத்தில் முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ் என்ற பிளாக் காமெடி திரைப்படம் சிறப்பாக வெற்றி பெற்று ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கு மிகவும் நேர்மறையான விமர்சனங்கள் பெற்றது. இதில் வினீத் ஸ்ரீனிவாசன் மற்றும் சுராஜ் வெஞ்சாரமூடு முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். Also Read: விஜய் சேதுபதியின் முதல் பான் இந்திய வெப் சீரிஸ் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது திரையரங்குகளில் நல்ல ஓட்டத்தைப் பெற்ற பிறகு, இப்படம் ஜனவரி 13 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் திரையிடப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் OTT இயங்குதளம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. மற்ற மொழி தமிழ், தெலுங்கு, ஹிந்தி. மலையாளம் ஆகிய மொழி ஆடியோக்கள்லுடன் இப்படம் வெளியாகும். https://twitter.com/disneyplushstam/status/1610977805285863425?s=46&t=Ow6D_yomDzD_5MIfmZqbtQ இப்படத்தை அபினவ் சுந்தர் மற்றும் நாயக் எழுதி இயக்கியுள்ளனர். விமல் கோபாலகிருஷ்ணன் இணை எழுத்தாளர் ஆவார், இதை டாக்டர் அஜித் ஜாய்…
Vijay Sethupathi: கோலிவுட் திரையுலகில் சின்ன சின்ன குனச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து, பின் ஹீரோ, வில்லன், அப்பா, தாத்தா, சூப்பர் டுலாக்ஸ் படத்தில் பெண் வேடம் என்று அனைத்து கதாபாத்திரத்தையும் தைரியமாக ஏற்று தனது அசாதூரியமான நடிப்பை வெளிப்படுத்தியவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. தற்போது கோலிவுட்டில் இருந்து டோலிவுட் பாலிவுட் வரை அதிகம் தேடப்படும் நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி. Also Read: விஜய்யின் வாரிசு படத்தின் மிக பெரிய விளம்பர நிகழ்ச்சி திட்டம் – ஹாட் அப்டேட் தொடர்ந்து தனது கேரியரில் எல்லைகளைத் தாண்டி வருகிறார். பல விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட மற்றும் சூப்பர் ஹிட் படங்களை ஹீரோவாக கொடுத்ததோடு மட்டுமல்லாமல், ரஜினியின் ‘பேட்ட’, விஜய்யின் ‘மாஸ்டர்’ மற்றும் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ ஆகிய படங்களில் வில்லனாக நடித்து மிக பெரிய பாராட்டை பெற்றார். ஷாஹித் கபூர், விஜய் சேதுபதி, கே கே. மேனன், ராஷி கண்ணா, ரெஜினா கசாண்ட்ரா,…
Varisu: தளபதி விஜய் நடித்த ‘வாரிசு’ படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் மற்றும் வெளியீட்டு தேதி நேற்று தயாரிப்பாளர்களால் வெளியிடப்பட்டது. அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, தமிழ் மற்றும் தெலுங்கு ட்ரெய்லர்கள் யூடியூப்பில் 24 மணி நேரத்தில் 1.8 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளுடன் 32 மில்லியனுக்கும் அதிகமான ரியல்-டைம் வியூஸ் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளனர். ‘வாரசுடு’ தெலுங்கு பதிப்பின் பிரமாண்டமான ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு ஹைதராபாத்தில் நடைபெறும் என்று ஏற்கனவே செய்திகள் படித்தோம். தற்போது சமீபத்திய செய்தி என்னவென்றால், ஜனவரி 8 (ஞாயிற்றுக்கிழமை) அன்று ஒரு திறந்த மைதானத்தில் விளம்பர நிகழ்வை (புரோமோஷன் ஈவண்ட்) நடத்த குழு திட்டமிட்டுள்ளது. Also Read: சிம்புவின் பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ஃபாஸ்ட் சிங்கிள் இந்த நேரத்தில் வெளியாகும் இந்த விழாவில் இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி, தயாரிப்பாளர் தில் ராஜு உள்ளிட்ட மற்ற நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொள்கின்றனர். இந்த விழாவில் தளபதி விஜய் கலந்து…
Pathu thala: ஓப்லி என். கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கெளதம் கார்த்திக், பிரியாபவானி ஷங்கர் இணைந்து நடிக்கும் திரைப்படம் பத்து தல இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து. தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்க்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. படம் வருகிற மார்ச் 30 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில் படத்தின் புரொமோஷன் வேலைகளும் கூடிய விரைவில் தொடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. Also Read: சூர்யா 42 படத்திற்குப் பிறகு சுதா கொங்கராவின் புதிய படத்தில் இணையும் சூர்யா சிம்புவின் பத்து தல படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் சிங்கிள் ட்ராக் பாடல் மற்றும் இசைவெளியீட்டு விழாவை படக்குழுவினர் பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மார்ச் 30 ஆம் தேதி திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் ஏ.ஆர் ரகுமான் இசையில் உருவாகி இருக்கும் பத்து தல படத்தில் இசைவெளியீட்டு விழா மார்ச் முதல் வாரத்தில்…
Suriya: சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் தனது சூர்யா 42 படத்தில் நடித்து வருகிறார். இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் 10 மொழிகளில் உருவாகும் என்று ஏற்கனவே படக்குழுவினர் அறிவித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து இரண்டு பாகங்கள் ஃபேண்டஸி ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது. சூர்யா, திஷா பதானி ஜோடியாகவும் மற்றும் கோவை சரளா, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள். Also Read: வாரிசு மற்றும் துணிவு ஒரே நாளில் மோதல் – இரு தயாரிப்பாளர்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ ‘சூர்யா 42’ படத்திற்குப் பிறகு கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு முன் ஒரு பெரிய படத்தை அவர் செய்யப் போகிறார் என்பதுதான் இப்போது பரபரப்பான செய்தி பரவி வருகிறது.…
Bommai Nayagi: பிளாக்பஸ்டர் தமிழ்த் திரைப்படத் இயக்குனர் பா.ரஞ்சித்தின் அடுத்த பெரிய தயாரிப்பு முயற்சியான பொம்மை நாயகி பிப்ரவரி 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்படம் வெற்றி இயக்குனரின் நீலம் புரொடக்ஷன்ஸ் பேனரால் யாழி பிலிம்ஸுடன் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ளது. காமெடி நடிகர் யோகி பாபு போஸ்டருடன், அவர் சக்திவாய்ந்த பாத்திரத்தில் காணப்படுகிறார். பொம்மை நாயகி ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான உறவைச் சுற்றி வருவதாகவும், கடலூரைப் பின்னணியாகக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. அறிமுக இயக்குனர் ஷான் எழுதி இயக்கியுள்ள, பொம்மை நாயகி, யோகி பாபு சுபத்ரா, ஹரி கிருஷ்ணன், ஜி.எம். குமார் மற்றும் எஸ்.எஸ்.ஸ்டான்லி ஆகியோர் நடித்துள்ளார். மேலும் இசையமைப்பாளராக சுந்தரமூர்த்தி கே.எஸ், அதிசயராஜ் ஒளிப்பதிவு செய்ய உள்ளனர். மற்றும் ஆர்.கே.செல்வா எடிட்டர் செய்ய உள்ளனர். யோகி பாபுவும் பொம்மை நாயகியின் படத்தில் அவரது நடிப்பிற்கான நல்ல விமர்சனங்கள் பெறுவர் என்று தெரிகிறது, ஏனெனில் அவர் சவாலான பாத்திரங்களை…
Varisu VS Thunivu: நேற்று மாலை 5 மணிக்கு தளபதி விஜய்யின் வாரிசு படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது தயாரிப்பாளர் தில் ராஜு ட்விட்டர் பக்கத்தில் வாரிசு படம் ஜனவரி 11 ஆம் தேதி பெரிய திரைகளில் வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். Also Read: அஜித்தின் துணிவு இந்த தேதியில் வெளியாகும் – உறுதி செய்த தயாரிப்பாளர் https://twitter.com/svc_official/status/1610710714880253955?s=46&t=idSMfbmflMuPz86bqwaNGg மறுபுறம் அஜித்தின் துணிவு படக்குழுவும் படம் ஜனவரி 11ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பாளர் போனி கபூர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த நிலையில் இப்போது வாரிசு தயாரிப்பாளா இந்த அறிக்கையால் ரசிகர்கள் மற்றும் சாதாரண பார்வையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இரண்டு பெரிய நட்சத்திரங்கள் ஒரே நாளில் பாக்ஸ் ஆபீஸ் மோதலில் யார் வின்னர் என்று தெரிய பொறுத்து இருந்து தான்…

